கொரொனா வைரஸை முழுமையாக ஒழிக்க முடியாது!
கொரொனாவை ஒரேடியாக ஒழித்து கட்ட முடியாது என்றும் ப்ளூ போன்று அதை அவ்வப்போது தனது கைவரிசையை காட்டிக் கொண்டு இருக்கும் என்றும் சீன அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரொனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய்க்கிருமி ஆய்வு கழக இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரொனா வைரஸ் குளிர்காலம் வரும் போதெல்லாம் உச்சபட்ச தொற்றை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் தொற்றுநோய் கழக இயக்குநர் ஆண்டனி உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதே கருத்தை ஆமோதித்து உள்ள குஜராத் இந்திய பொது சுகாதார கழகத்தின் இயக்குனர் திலீப் மாலவான்கர் கொரொனா அறிகுறிகள் இல்லாமல் வேகமாக பரவும் திறன் கொரொனாவிற்கு இருப்பதால் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் அது நீண்ட காலம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். சீசன் நோயான ப்ளு ஒவ்வொரு ஆண்டும் உலகில் மூன்று லட்சம் முதல் 6 லட்சம் பேர் பலி கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுவது குறிப்பிடத்தக்கது.






