நெஞ்சில் கஞ்சா செடி, காதலி பெயரை பச்சை குத்திய இளைஞர்..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் தனது நெஞ்சில் கஞ்சா செடி மற்றும் காதலியின் பெயரை பச்சை குத்தி இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட முத்தமிழ் நகர் பகுதியில் 21 வயதாகும் கார்த்திகை கோயில் திருவிழாவிற்கு சென்ற பொழுது காதல் ஏற்பட்டு 15 வயது பழங்குடியின சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமிக்கு 15 வயதாகிறது என்பது உறுதியானது.
இது குறித்து சமூகக் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் இளைஞர் கார்த்திக்கை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அந்த இளைஞர் ஏற்கனவே பல கஞ்சா மற்றும் போக்சோ வழக்குகளில் கைதானது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் தன் நெஞ்சில் ஒரு கஞ்சா செடி அதன் அருகில் காதலியின் பெயரை பச்சை குத்தியுள்ளார். இதையடுத்து கார்த்திகை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.





