--- --:--:-- --

திமுகவில் பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் ..!

6

திமுகவில் பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வேட்பு மனுக்களை இன்று முதல் தலைமை கழகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நாளை பெறப்படும் என்றும் நாளை மறுதினம் அதாவது நான்காம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

வேட்பு மனுக்களை ஐந்தாம் தேதி பிற்பகல் ஒரு மணி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அன்று மாலை 4 மணி அளவில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon