அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லையா?
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கொரொனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அதே 3 பேர் உயிரிழந்தனர் என்று செய்தி வெளியானது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மருத்துவ கல்வி கல்லூரி மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் ரவி நாதன், மருத்துவத் துறை தலைவர் பாபு ஆனந்த் , செவிலியர் 5 பேர் எனஏழு பேருக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவமனை சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கும் இணை நோய்கள் இருந்ததால்தான் உயிரிழந்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார்.






