திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதிக்கான வேட்பாளர் மாற்றம்..!
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி மாநில செயலாளராக இருந்த சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சாதிரீதியாக சூரியமூர்த்தி பேசிய பழைய காணொலிகள், சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு, கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் நாமக்கல் வேட்பாளரை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சூரியமூர்த்திக்கு பதிலாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின், நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.






