இரு வேறு கொரொனா தடுப்பூசிகளை செலுத்தலாமா..? – பரிசோதனை
ஒருவருக்கு இரு வேறு கொரொனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு நபர் முதல் தவணையில் எந்த தடுப்பு ஊசி செலுத்தி கொள்கிறாரோ அதே தடுப்பூசியை இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் ஒருவருக்கு இரு வேறு தடுப்பூசிகளை மாற்றி மாற்றி செலுத்தலாம் என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.







