ஓசூரில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்..!
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் ஓசூரில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேபோல சென்னை சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு இரவில் செல்லும் 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் மாற்று உரு பெற்றுள்ள கொரொனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அந்நாட்டில் கடல், விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. உலகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணிக்கு மேல் கர்நாடக மாநில அரசு பேருந்துகள், பெங்களூர் நகர பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.






