--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது பேருந்து சேவை…! முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

6

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. முக கவசம் அணிவது கிருமிநாசினி பயன்படுத்த முன்னெடுக்க நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.

 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது பேருந்து போக்குவரத்து 68 நாட்களுக்கு பிறகு தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களை கொண்ட ஐந்தாவது மண்டலத்தில் 450 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.60 சதவீத பயணிகள் ஏற்றப்பட்டு அமர வேண்டிய இருக்கையை குறிப்பிடும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 24 புறநகர் பேருந்துகளும், 11 நகரப் பேருந்துகள் இயங்கின.

 

முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். பணிமனையிலேயே ஓட்டுநர், நடத்துனருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, சத்தியமங்கலத்திலிருந்து மாநில எல்லையான தாளவாடிக்கும் பேருந்து இயக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 192 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் என மொத்தம் ஏழு மாவட்டத்திற்குள் பேருந்து சேவை தொடங்கியது. போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

 

கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 19 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 60 சதவீத பயணிகளுக்கு அனுமதி என்றாலும் நகரப் பேருந்துகளில் குறைவான பயணிகளே பார்க்க முடிந்தது. வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் 40 பயணிகள் வரை பயணித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon