வனிதா விஜயகுமார் மீது கொடூர தாக்குதல்..பிரதீப் ஆதரவாளர் தான் காரணமா..?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நாளுக்குநாள் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. 6 சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸின் 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் 7 வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
வார இறுதியில் பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து ‘ப்ரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கமல் ஹாசன் முன்பு வைத்ததன் விளைவாக அவர் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியரற்றப்பட்டார்.
பிரதீபுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது அநியாயம், இது சரியான தீர்வே இல்லை என்று பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்து வந்தனர்.ஒட்டுமொத்த இணையத்தலமே ப்ரதீப்பைய் பற்றி தான் பேசியது.
மேலும், ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் முதல் இடத்தை பிரதீப் ஆண்டனி என்ற ஹாஷ்டாக் பிடித்தது. இந்த நிலையில், தன் மீது பிரதீப் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதாக வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார், “நேற்றிரவு பிக் பாஸ் 7 தமிழ் ரிவ்யூவை முடித்துவிட்டு, இரவு உணவுக்கு பிறகு என் தங்கை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது காருக்கு அருகில் சென்றேன்.
லைட் இல்லாமல் இருட்டாக இருந்த அந்த இடத்தில் திடீரென தோன்றிய மர்ம நபர் ஒருவர் “ரெட் கார்ட்” கொடுக்குறீங்களா? அதுக்கு நீ சப்போர்ட் வேற..“என்று கூறியபடி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார். பிரதீப் ஆதரவாளராக அவர் இருக்கலாம்.இரவு 1 மணிக்கு ரத்தம் வடிய வலியில் துடித்த என்னை, என் தங்கை மீட்டு முதலுதவி கொடுத்து, இது குறித்து போலீசிடம் புகாரளிக்குமாறு வலியுறுத்தினார்.
ஆனால் எனக்கு அதில் நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அந்த நபர் யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, என்னை தாக்கிவிட்டு பைத்தியக்காரன் போல் சிரித்த அவன் சத்தம், என் காதுகளில் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று தாக்கப்பட்ட முகத்தின் புகைப்படத்துடன், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






