கணவரிடம் பிரியாணி கேட்ட மனைவி..! வாங்கி தராததால் தீக்குளித்து தற்கொலை!
பிரியாணி வாங்கி தரவில்லை என்று கோபத்தில் கணவருடன் சண்டை போட்ட பெண் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் மாமல்லபுரம் அருகே அரங்கேறி உள்ளது. பூஞ்சேரி பகுதியில் கணவர் மனோகரன், இரண்டு குழந்தைகளுடன் சௌமியா என்று அந்த பெண் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
புதன்கிழமை அன்று வீட்டின் உரிமையாளர் கணவர் மனோகரனிடம் பிரியாணி வாங்கி வருமாறு கூறி பணம் கொடுத்துள்ளார். அப்படியே தமக்கும் பிரியாணி வாங்கி வருமாறு மனைவி சௌமியா கூறவே கையில் பணம் இல்லை என்று மறுத்துள்ளார் மனோகரன். இதனால் இருவருக்கும் சிறிய அளவில் வாக்குவாதம் உருவாகியதாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் இப்படி அடம் பிடிப்பதால் உன்னை பிடிக்கவில்லை என மனோகரன் கூறியதாகச் சொல்லப்படும் நிலையில் ஆத்திரமடைந்த சௌமியா பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து மொட்டை மாடிக்கு எடுத்து சென்று உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
80 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சௌமியா உயிர்போகும் தருணத்தில் கணவர் எப்படியும் தடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தற்போது அவர்களைப் பிரிந்து செல்வதை வேதனையாக உள்ளது எனவும் உறவினர்களிடம் புலம்பிய தாக கூறப்படுகிறது.






