கொசுவத்தி ஏற்றிவைத்ததால் வெடித்து சிதறிய பிரிட்ஜ் ! முதியவர் உடல் கருகி பலி!
திருவாரூர் அருகே பயன்படுத்தப்படாத பழைய பிரிட்ஜ் மீது கொசுவத்தி வைத்து அருகில் படுத்துறங்கிய முதியவர் ஃப்ரிட்ஜில் தீப்பற்றி வெடித்து சிதறியதில் உடல் கருகி உயிரிழந்தார். நல்லினம் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது வீட்டில் பயன்படுத்தப்படாத பழைய ஃப்ரிட்ஜில் வீட்டு துணியால் மூடி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஃப்ரிட்ஜின் மேல் கொசுபத்தி ஏற்றிவைத்துவிட்டு பக்கிரிசாமி திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் ஃப்ரிட்ஜின் மேல் மூடப்பட்டிருந்த துணி தீப்பிடித்ததில் ஃப்ரிட்ஜ் முழுவதும் தீ பரவி வெடித்து சிதறியுள்ளது.
இந்த கோர விபத்தில் அருகில் படுத்து இருந்த முதியவர் பக்கிரிசாமி உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




