சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிய திரிஷா!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் நடித்து வந்த திரைப்படத்திலிருந்து நடிகை திரிஷா விலகியுள்ளார். ராம் சரண் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து துவக்கத்தில் கூறியதிலிருந்து தற்போது மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை என்று திரிஷா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




