காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவர்கள்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரெட்டியபட்டி சேர்ந்ததோழிகளான 16 வயது சிறுமிகள் இருவர் திடீரென காணாமல் போயுள்ளனர்.
விசாரணை நடத்திய போலீசார் அதே ஊரை சேர்ந்த சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியன் ஆகிய இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நண்பர்கள் இருவரும் சிறுமிகளை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் ரீதியாக அத்துமீறிய தாகவும் கூறப்படுகிறது.
சிறுமிகள் மீட்கப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொள்ள உதவியதாக கைது செய்யப்பட்ட சங்கிலியின் தாயார் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது.







