விளம்பரம் செய்து கஞ்சா வியாபாரம் ? மானாமதுரையில் பரபரப்பு !
உலக நாடுகள் முழுதும் கொரோனா அச்சத்தால் பீதியடைந்துள்ளது. பலரும் 2 வேளை உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை எதிரில் உள்ள பஸ்டாப்பில் கஞ்சா, சரக்கு தேவைக்கு தொடர்புகொள்ளுக என்பது போல் செல்போன் எண்ணுடன் விளம்பரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது கஞ்சா வியாபாரம் செய்து சட்ட விரோத செயலில் ஈடுபடும் குற்றவாளிகளின் செயலா. இல்லை யாரையும் பலி வாங்கும் நோக்கத்தோடு செயல்படும் விஷமிகளின் செயலா என்று தெரியாமல் பொதும்மக்கள் புலம்புகின்றனர்.

மறைந்து மறைந்து விற்பனை செய்யப்பட்ட கஞ்சா போதை வஸ்து விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுகிறதா என்று மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மானாமதுரை காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.







