திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
திருச்சியில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சமது மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 இடங்களுக்கு இன்றும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.






