திருப்பூரில் படகுசவாரி தற்காலிகமாக நிறுத்திவைப்பு!
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், ரூ.1.30 கோடியில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் படகு சவாரி துவங்கப்பட்டது.
படகு இல்லத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் ‘பாதுகாப்பு & கண்காணிப்புக்குழு’ ஆய்வில், படகு சவாரியின் போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், மீட்பு படகு தயார் நிலையில் இல்லாததால், தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தினர்.





