ரத்தம் சரிந்த நாள்! பழிக்குப் பழி தொடரும் எதிரியை வீழ்த்துவது உறுதி!
எதிரிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஒரு கும்பல். எதிரியை பழி வாங்க பாதிக்கப்பட்டவர்கள் சபதம் இருக்கும் பல கதைகள் எல்லாம் ஏராளமான சினிமாக்களில் பார்த்துள்ளோம் .அதனை மிஞ்சும் வகையில் மதுரை பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
எதிரிக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது என்பதை ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது ஒரு கும்பல். இந்த விவகாரத்தின் பின்னணியில் இருதரப்பினரிடையே ஓராண்டாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் வன்மம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரையின் ஒரு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் காமராஜர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி பிரவீன்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரவீன்குமார் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி கல்லூரி வாசலில் அவரது புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை ஒட்டி அதற்கு சிலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
எடுக்கப்பட்ட அந்த போஸ்டர் தான் புதிய பிரச்சினைக்கு தொடக்கப்பள்ளி பார்க்கப்படுகிறது. அந்த போஸ்டரில் சிந்திய ரத்தம் வீண் போகாது எதிரியை வீழ்த்துவது உறுதி. வயது ஒன்று ரத்தம் சரிந்ததால் பழிக்குப்பழி தொடரும் என்று எதிர் தரப்பை எச்சரிக்கும் வாசகங்கள் இருப்பது காண்போரை மிரள வைத்துள்ளது. கொலை செய்யப்போவது இவ்வளவு தைரியமாக போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கும் கும்பல் யார் என்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது காவல்துறை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




