--- --:--:-- --

வருகிற 26-ஆம் தேதி வானில் வரப்போகும் ரத்த நிலா..!

2

வானில் மிகவும் அரிதான ரத்த நிலாவை வருகிற 26-ஆம் தேதி காணலாம் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் அன்றைய தினம் மாலை 3.15 முதல் 6.22 மணி வரை நிகழ உள்ளதாக கோளரங்க இயக்குனர் தெரிவித்தார்.

 

இந்த முழு சந்திர கிரகணத்தை கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும் என்றார்.

 

அவர் கிரகணத்திற்கு பின் நிலவு ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தைவிட பிரகாசமாக காட்சியளிக்கும் என்று கூறிய கோளரங்க இயக்குனர், பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும் போது பல ஒளிச்சிதறல் காரணமாக அவை அவ்வாறு காணப்படுவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon