--- --:--:-- --

மயிலாப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சீல்..!

1

பாரதிய ஜனதா கட்சியின் தென் சென்னை மாவட்டம் சார்பில் வியாழக்கிழமையன்று சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ஆர்‌.கே.மடம் சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தென் சென்னை பாராளுமன்ற பொறுப்பாளர் ராஜா தலைமையில் மயிலாப்பூர் தொகுதியின் பாராளுமன்ற அலுவலகம் மூத்த தலைவர்கள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

 

இந்த நிலையில், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

இதனையடுத்து பாஜக தேர்தல் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.நேற்று திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று சீல் வைக்கப்பட்டது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon