--- --:--:-- --

கையேந்தி பிச்சை கேட்டு பாஜக நிர்வாகிகள் போராட்டம்..!

2

த்திய அரசு பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிதியை முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்பியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

 

மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ஒதுக்கிய 4,300 கோடி ரூபாயை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

 

300 கோடி நிதியை மட்டும் பெண்கள் உரிமை தொகைக்கு பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள 4000 கோடி ரூபாயை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக புகார் கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

 

கிருஷ்ணகிரி, கரூர், புதுக்கோட்டை, ஈரோடு, தென்காசி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

 

Right Menu Icon