--- --:--:-- --

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது

pranab-mukherjee-67-1564320661-396036-khaskhabar

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோரிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணி செய்ததற்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.

Leave a Reply

Right Menu Icon