--- --:--:-- --

ஜன்னலில் இருந்து வந்த ரூபாய் நோட்டுகள்! பணமழையில் நனைந்த பாதசாரிகள்!

1

கொல்கத்தாவில் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடைபெற்ற நிறுவன கட்டடத்திலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசி எறிந்தனர். போக் என்ற வணிக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

 

அலுவலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் பாதுகாப்பு ஊழியர்களும், அதிகாரிகளும் நின்றிருந்தனர். அப்போது அலுவலக கட்டடத்தின் பல்வேறு தளங்களில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசினர். சில கட்டுகள் அந்தரத்தில் பிரிந்து ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்தன.

Leave a Reply

Right Menu Icon