--- --:--:-- --

பானி பூரி விற்க தடை – அரசு அதிரடி

8

நேபாளம் நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானிபூரி விற்பனை செய்ய மாநகராட்சி தடை விதித்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென காலரா நோய் பரவி வருவதால் ஏற்கனவே இரண்டு பேருக்கு காலரா உறுதி செய்யப்பட்டிருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீர் மூலமாக நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பகுதியில் மேலும் காலரா பரவாமல் தடுக்கும் வகையில் கூட்டம் அதிகம் கொண்ட பகுதிகள் மற்றும் முக்கிய வளாகங்களில் பானிபூரி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon