தாயகம் திரும்பினார் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து..!
தாயகம் திரும்பிய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் உள்ளதாக தெரிவித்தார்.







