--- --:--:-- --

முடி வெட்ட காத்திருந்த வாலிபரின் தலையை வெட்ட முயற்சி..!

9

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முன் விரோதத்தால் இளைஞர் ஒருவரை மார்க்கெட்டில் விரட்டி விரட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வேத கோயில் தெருவில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவர் அதே திருவள்ளுவர் வசித்து வரும் லாரி ஓட்டுனர் சரவணன் என்பவரின் மனைவியுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதை சரவணன் கண்டித்தும் முத்துக்குமார் கேட்காத நிலையில் அவரை கொலை செய்ய சரவணன் திட்டமிட்டுள்ளார்.

 

இந்த இடத்தில் திசையின் விளை பேருந்து நிலையம் எதிரில் உள்ள இந்திரா மார்க்கெட் பகுதியில் உள்ள சலூன் கடையில் முத்துக்குமார் முடி வெட்ட சென்றுள்ளார். அப்பொழுது நண்பர்களோடு உள்ளே புகுந்த சரவணன் அவரை அறிவாளால் வெட்டியுள்ளார்.

 

கழுத்தில் வெட்டுப்படாமல் தலையில் பின் பக்கத்தில் அரிவாள் பட்ட நிலையில் சுதாரித்துக் கொண்ட முத்துக்குமார் தப்பியோடி உள்ளார். அவரை விடாமல் அந்த கும்பல் விரட்டி சென்றது. அவர்களிடமிருந்து தப்பி மயக்க நிலையில் இருந்த முத்துக்குமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon