வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தில் இன்று மழை
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் ஞாயிறு வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், தமிழகம், காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலையில் 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என கணித்துள்ளது.





