--- --:--:-- --

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அசோக் காஸ்தி உயிரிழந்துள்ளார்..!

1

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அசோக் காஸ்தி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 55. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்கு கடந்த 2ஆம் தேதி கொரொனா இருப்பது கண்டறியப்பட்டது.

 

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தமது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் துர்கா பிரசாத்தை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அசோக் காஸ்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon