இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளராக வேண்டும்..!
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா விருப்பம் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்து வரும் ஆட்சி நாட்டிற்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் அவர் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருக்க பொருத்தமானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கூட்டம் தொடங்க உள்ள நிலையில் இந்த பேச்சு வெளியாகி உள்ளது.





