மதுரைக்கு அதிவேகத்தில் வந்து மோதிய சரக்கு வாகனம்..!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மினி சரக்கு வேன் அதிவேகமாக மோதிய விபத்தில் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. பாளையங்கோட்டையில் செந்தில்ராஜ் என்பவர் அதிக போக்குவரத்து உள்ள ஆலையில் தனது மினி சரக்கு வேனை அதிவேகமாக இயக்கி வந்துள்ளார்.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் எதிரே வந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி நின்றது. போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் செந்தில்ராஜ் அதிவேகமாக மதுபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது.
இதனை அடுத்த முதல் கட்டமாக 10,000 ரூபாய் அபராதம் விதித்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






