--- --:--:-- --

அதிமுக மாஜி எம்.பி., லட்சுமணன் திமுகவுக்கு தாவல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்

அதிமுக மாஜி எம்.பி., லட்சுமணன் திமுகவுக்கு தாவல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்

திமுக முன்னாள் எம்.பி.,யும், அதிமுக அமைப்பு செயலாளருமான லட்சுமணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 

தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நெருங்கும் சூழலில், அரசியல் புள்ளிகளின் கட்சித் தாவலும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. கடந்த வாரம் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணையப் போவது உறுதியாகியுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2011-ல் சுகாதார அமைச்சராக இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் . விஜய் இரு நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் எம்.பி.,இரா.லெட்சுமணன் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

 

விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர், மாவட்ட மருத்துவ அணி முன்னாள் செயலாளர் என பொறுப்புகள் வகித்த
டாக்டர் இரா.இலட்சுமணன், அதிமுக பிளவுபட்ட போது ஓபிஎஸ் அணியில் இணைந்தவர். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த லட்சுமணன் அதிருப்தியில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

 

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று காலை லட்சுமணன், திமுகவில் இணைந்தார்.லட்சுமணனுடன் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.குப்புசாமி, வானூர் தொகுதி செயலாளர் வி.எம்.ஆர்.சிவா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் இராம.சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.மணவாளன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.என்.முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் எம்.என்.ஏழுமலை, கோலியனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் என்.ஆர்.மணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon