ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நாகேந்திரன், சம்போ செந்தில் பெயர் சேர்ப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிறையில் இருந்து திட்டம் தீட்டிய நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் இருந்து இவர், சதி திட்டம் தீட்டியதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது குற்றவாளியாக கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பக்க குற்றப்பத்திரிகையில் 30 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.





