--- --:--:-- --

தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் பலி.வனத்துறையினர் விசாரணை !!

IMG-20200502-WA0116

கோவை தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள வீரபாண்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி( வயது 55 ). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரஷாந்த்,கௌதம் என இரு மகன்களும் உள்ளனர்.

 

இந்த நிலையில் அய்யாச்சாமி இன்று வீரபாண்டி வடபுறம் உள்ள மலையடிவாரத்தில் வால்குட்டை எனுமிடத்தில் தனக்கு சொந்தமான காடு அருகே சென்ற போது அப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தடாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கொரோனா தாக்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் மனித – வன உயிரின மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என பேட்டியளித்திருந்த நிலையில் தற்போது கோவை தடாகம் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon