காலதாமதமாக நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!
பெரம்பலூரில் அரிசி ஆலை உரிமையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் மகளிர் காவல் துறையினர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவருக்கும் அவரது மகன் சந்தோஷுக்கும் இடையில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தந்தை மற்றும் மகனிடையே மீண்டும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது குழந்தை வேலுவை மகன் சந்தோஷ் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் குழந்தை வேலு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே தந்தையை அவரது மகன் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் தற்பொழுது சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மகன் தாக்குதலால் குழந்தை வேலு உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.





