எங்கள பல்லு புடிச்சு பாக்குறீங்களா – ஆர்.கே.செல்வமணி ஆவேசம்
“தயாரிப்பாளர் சங்கம் நாலாம் பிரிஞ்சி இருக்கிறது. இதை ஒன்று சேர்க்க எங்கள பல்ல படிச்சு பாக்குறீங்க. இன்னைக்கு 300 400 படங்கள் வெளிவராமல் இருக்கிறது. அதை சரி செய்யாமல் எங்களுக்கு போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கிறேன் என்று இறங்கி இருக்கீங்க” என ஆர்.கே.செல்வமணி ஆவேசமாக பேசினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் – பெப்சி அமைப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ‘பெப்சி’ அமைப்பு, வரும் 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்தது.
அதன்படி இன்று சென்னை ராஜரத்தினம் அரங்கு அருகே பெப்சி அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இன்று படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் என எந்த பணிகளும் நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதில் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி, “இன்னைக்கு ரஜினிகாந்த் விஜய் சேதுபதி சமுத்திரக்கனி படம் பிடிப்பு எல்லாம் நின்னு போயிருக்கு.
இது யாரால தயாரிப்பாளர் சங்கத்தால தான். தயாரிப்பாளர் சங்கம் நாலாம் பிரிஞ்சி இருக்கிறது. இதை ஒன்று சேர்க்க எங்கள பல்ல படிச்சு பாக்குறீங்க. இன்னைக்கு 300 400 படங்கள் வெளிவராமல் இருக்கிறது. அதை சரி செய்யாமல் எங்களுக்கு போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கிறேன் என்று இறங்கி இருக்கீங்க.எங்களை அழிக்க நினைக்கிறது உங்களுக்கு என்ன லாபம்?. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சில நிர்வாகிகள் எங்களை அடிமையாக நடத்த முயற்சித்தார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தற்போது படம் எடுக்கும் நீங்கள் நமக்கு பெப்சி அமைப்பு வேண்டும் என்று சொல்லுங்கள்.பெப்சி அனைத்து தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணிபுரியும் சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்கள் ஏற்படுத்தி தரவில்லை என்றால் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.





