அரக்கோணம் விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் போலீஸைக் கண்டித்து, நாளை மறுநாள் (மே 21) அரக்கோணம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.
மேலும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த துடிக்கும் திமுக நிர்வாகி (கள்) மீது இந்த ‘டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.





