ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்..!
நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு அரிசிக்கு பதிலாக வழங்கப்படும் என்றும் இந்த திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.
இதனையடுத்து இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்ட நிலையில் கேழ்வரகு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






