டங்ஸ்டன் சுரங்கம் நிறுத்தி வைப்பு..நன்றி சொன்ன அண்ணாமலை..!
மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் தவிர்த்து சுமார் 1800 ஹெக்டேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளதாக எம்பி சு.வெங்கடேசன் விவரித்துள்ளார்.
மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், 2000 ஹெக்டேர் பரப்பு கொண்டநாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மத்திய அரசு ஏலம் விடுவது தொடர்பாக தமிழக அரசுக்கு 2023 செப்டம்பர் 15-ல் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு கோரிய ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாயக்கர்பட்டி உள்பட ஏலத்துக்கு விடத் திட்டமிட்ட 3 சுரங்க இடங்களின் விவரங்களை மத்திய அரசு கோரிய நிலையில், அதை தமிழக அரசு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் 193 ஹெக்டேர் பரப்பிலான பகுதியில் பல்லுயிர்ப்பரவல் பகுதி இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியிருந்தாலும் ஏலத்துக்கு விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.





