அங்கொடா லொக்கா போதை மருந்துகளை விநியோகித்ததாக வெளிவரும் தகவல்..!
மறைந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா ஊட்டச்சத்து உணவு போர்வையில் போதை மருந்துகளை விநியோகித்தாரா என்று சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. பிரதீப் சிங் என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கோவையில் வசித்து வந்த அங்கொடா லொக்கா கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இலங்கையை சேர்ந்த அம்மானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாம சுந்தரியும், திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை திரட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊட்டச்சத்து உணவுகள் போர்வையில் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. இதற்காக பெரிய குழுவே இயங்கி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்திற்கு போதை மருந்து கடத்துவதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த படகு உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






