சீனாவில் இருந்து தம்மை மீட்டு செல்லுமாறு ஆந்திர பெண் உருக்கம்
சீனாவில் இருந்து தம்மை மீட்டுச் செல்லுமாறு ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஜோதி சீனாவில் பணியாற்றி வந்தார். அங்கு கொரோனா வைரஸ் பரவியதால் இந்திய அரசு அனுப்பிய விமானம் மூலமாக ஆந்திரா திரும்ப ஜோதி தயாராக இருந்தார்.
விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்த போது ஜோதிக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் ஜோதி தனது பெற்றோருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தற்போது தனக்கு காய்ச்சல் குறைந்து இருப்பதாகவும் வரும் 14ஆம் தேதி தமக்கு திருமணம் நடைபெற இருப்பதால் உடனடியாக இந்தியா அழைத்துச் செல்ல மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் . இதையடுத்து ஜோதியின் பெற்றோர் தமது மகளை மீட்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






