கான்பூரில் குழியில் சிக்கிய முதியவர்..!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் குழியில் சிக்கியவரை மீட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராம மக்கள் குடிநீருக்காக பல தூரம் சென்று ஆற்றில் தண்ணீர் எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குடி தண்ணீர் எடுக்க சென்ற பொழுது முதியவர் ஒருவர் புதைகுழியில் சிக்கினார். தகவலறிந்து வந்த ஊர்மக்கள் அவரை காப்பாற்றினார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் அவரை காப்பாற்ற முயற்சி செய்யாமல் செல்போனில் படம் பிடித்த காட்சி வெளியாகியுள்ளது.





