தேனி சின்னமனூர் அருகே கார் மோதி முதியவர் பலி!
சின்னமனூரில் செப்.23இல் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் ஹக் (வயது 70) என்பவர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் பூமலைக்கு ண்டு பகுதியைச் சார்ந்த அருண்பிரசாத் என்பவர் ஓட்டி வந்த கார் அப்துல் ஹக் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சின்னமனூர் காவல்துறை எஸ்ஐ இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.






