250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய அமைச்சர் சிவசங்கர்..!
பரவலூரில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வாழ்த்தினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பருமலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் குங்குமம் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியும் அட்சதை போட்டு சிவசங்கர் வாழ்த்தினார்.






