சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் பலி..!
பூந்தமல்லி அருகே சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் இறந்ததையடுத்து சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். பூந்தமல்லியில் செந்தில்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்.
சித்த மருத்துவம் படித்து வந்த இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து பத்து ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. பெருமாள் சித்த மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக பெருமாளின் கிளினிக்கில் சிகிச்சை பெற வந்துள்ளார். அப்பொழுது பெருமாள் ஊசி போட்ட நிலையில் அடுத்த பத்து நிமிடத்தில் ராஜேந்திரன் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பூந்தமல்லி காவல்துறையினர் ராஜேந்திரன் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





