மரத்தில் மோதி விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸ் வாகனம்..!
கேரளாவில் ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் 4:30 மணிக்கு நோயாளி ஒருவரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது.
மிக வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






