பெட்ரோல் டீசல், விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!
பெட்ரோல் டீசல், விலை உயர்வுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் தொடங்கிவிட்ட நிலையில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது பணவீக்கத்தின் உயர்வை மக்கள் கண்டு வருகின்றனர் எனக் கூறினார்.
மத்திய அரசின் வரிகள் பெருந்தொற்றாக அலையலையாக வருகின்றன என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பெட்ரோல், விலை உயர்வு அதிகப்படியான பொது கொள்ளை என்றும் பிரதமர் மோடியின் அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.






