--- --:--:-- --

கொரொனா சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்…!

6

கேரளாவில் கொரொனா சிகிச்சைக்காக அழைத்து சென்ற இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும் அவரது 19 வயது மகளும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

அவர்களில் அந்த இளம்பெண்ணை அடோரில் உள்ள கொரொனா சிகிச்சை மையத்திற்கு மருத்துவர்கள் மாற்றினர். இதற்காக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். செல்லும் வழியில் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரான நவ்பல் என்பவன் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்த புகாரின் பேரில் ஓட்டுநர் நவ்பல் கைது செய்யப்பட்டார். காயன்குளம் பகுதியை சேர்ந்த நவ்பல் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக பத்தினம்திட்டா மகளிர் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon