--- --:--:-- --

மூன்று மாத குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்..வழிவிடாமல் சென்ற கார்..!

7

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அவசர சிகிச்சைக்காக மூன்று மாத குழந்தையை ஏற்றுச் சென்ற ஆம்புலன்ஸ்க்கு இனோவா கார் ஒன்று வழி விடாமல் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பகுதியில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.

 

புளியம்பட்டி அருகே நல்லூர் பகுதியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த பொழுது ஆம்புலன்ஸ்க்கு முன்னால் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று இடதுபுறமாக செல்லாமல் நடுரோட்டிலும் சைரன் ஒலித்த பொழுது வழிவிடாமல் வேகமாக சென்றது.

 

தொடர்ந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் கார் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. எதிர் திசையிலும் வாகனங்கள் தொடர்ந்து வந்ததன் காரணமாக innova காரை முந்தி செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தடுமாறி உள்ளார்.

 

இதனை ஆம்புலன்ஸ் உரிமையாளர் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Right Menu Icon