பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்..!
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி இணையதள வணிக நிறுவனமான அமேசான் பத்தாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விற்பனை. வணிக வளம். குரல் வழி உதவியான அலெக்சா ஆகிய பிரிவுகளில் பணியாற்றுவதில் ஆட்குறைப்பு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்திற்கு நேரடியாகவும் மணி கணக்கிலும் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் பத்தாயிரம் பேரை நீக்குவது ஒரு சதவீதத்திற்கும் குறைவு என நிரூபண அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது.
மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் அமேசான் அவற்றுடன் இணைந்துள்ளது.





