கார் மீது ரயில் மோதிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள்..!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதும் திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்நகர காவல்துறையினரால் பகிரப்பட்டு உள்ள அந்த வீடியோவில் ரயில்வே கேட்டில் ஒரு பகுதி மட்டும் தாழ்வாக இருந்ததை கவனிக்காமல் பிஎம்டபிள்யூ கார் ஒன்று இடது புறமாக திரும்பி தண்டவாளத்தை கடக்க முயல்கிறது.
அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் கார் மீது மோதி தள்ளியபடி வேகமாக செல்கிறது. கடந்த மூன்றாம் தேதி நடந்த இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது . அதன் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





