நீச்சல் உடையில் அருவியில் குதித்த அமலா பால்..!
நடிகை அமலா பால் கைவசம் எந்த பெரிய படங்களும் இல்லாத நிலையில் தற்போது ஆன்மீகத்தில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
அவர் சில மாதங்களுக்கு முன்பு அவரது முன்னாள் நண்பர் மீது பாலியல் புகார் கூறி போலீசில் புகார் செய்தார். அவரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அவர் ஜாமினில் வெளியில் வந்துவிட்டார். தற்போது அமலா பால் வெளிநாடுகளில் இருக்கும் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று இருக்கிறார்.
அங்கு அவர் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் தற்போது அமலா பால் நீச்சல் உடையில் அருவியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.





